October 10, 2020
தண்டோரா குழு
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடுகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கோவையில் கொரணா் தாக்கம் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து சாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமை இன்று பொதுமக்கள் பூட்டியிருந்த கதவுக்கு முன் நின்று கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி இறைவனை வழிபட்டு சென்றனர் மன வேதனையை தீர்த்துக்கொள்ள இறைவழிபாடு மட்டுமே சிறந்த வழி என்பதை உணர்ந்த மக்கள் மீண்டும் கோவில் கதவு அடைக்கப்பட்டு அதை கண்டு தங்களது வேதனை அடைந்தனர்.
கொரோனா காலத்தில் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.