• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை !

April 25, 2018 தண்டோரா குழு

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம்,ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் 75 வயதான சாமியார் ஆஸ்ராம் பாபு. கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் சாமியார் ஒருவர் இவர் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆஸ்ராம் பாவுவை கைது செய்தனர்.இதற்கிடையில்,குஜராத்தில் ஆஸ்ராம் பாபுவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் இருபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஆசாராம் பாபு,அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்குகளில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.பலாத்கார வழக்கில் அரசு தரப்பில் 44 சாட்சிகளிடமும்,சாமியார் தரப்பில் 31 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.இறுதிக்கட்ட விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில்,இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆசாரம் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சென்று நீதிபதி மதுசூதனன் சர்மா தீர்ப்பு வாசித்தார். அப்போது,ஆசாராம் பாபு உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனையும்,மேலும் 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டணை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும்,சாமியார் ஆஸ்ராம் பாபுவுக்கு ராஜஸ்தான்,குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அதிக அளவு ஆதரவாளர்கள் உள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க