• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாப்பாட்டில் புழு -முருகன் இட்லி கடை உரிமம் ரத்து

September 11, 2019 தண்டோரா குழு

சாப்பாட்டில் புழு, தரமற்ற உணவு விநியோகத்தால் முருகன் இட்லிக் கடைக்கு உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

முருகன் காபி நிலையம் என்று 1991ல் மதுரையில் தொடங்கப்பட்ட கடைதான் முருகன் இட்லி கடை. அதன்பின் முருகன் இட்லி கடை என்று பெயர் மாற்றப்பட்டு தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. மிகவும் பிரபலமான இந்த உணவகத்திற்கு சென்னையில் 17 கிளைகள் உள்ளது.அதேபோல் மதுரையில் 3 மற்றும் சிங்கப்பூரில் இரண்டு கிளைகள் உள்ளது. இதற்கிடையில், சென்னை பகுதியில் உள்ள முருகன் இட்லி கடைகளில் பரிமாறப்படும் உணவில் சுகாதாரமின்றி இருப்பதாகவும், உணவுகளில் புழு உள்ளிட்ட பூச்சிகள் கிடப்பதாகவும், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் மாவட்ட நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையில் அதிகாரிகள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் முருகன் இட்லி கடையின் உணவகத்தை சோதனை செய்தனர். அம்பத்தூர் முருகன் இட்லி கடை என்பது உணவு தயாரிக்கும் மையம் ஆகும். இங்கிருந்து சென்னையில் இருக்கும் பல முருகன் இட்லி கடைகளுக்கு உணவுகள் எடுத்து செல்லப்படுகிறது. அதேபோல் உணவு தயாரிக்க தேவையான பொருட்கள் இங்கிருந்து எடுத்து செல்லப்படுகிறது.

அப்போது,உணவு தயாரிக்கும் கூடத்தில் பூச்சி தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனவும், தயாரிக்கப்படும் உணவு வகைகள் சுகாதாரமின்றி இருப்பதும், உணவு தயாரிக்கும் ஊழியர்கள் எப்படி கையாளுவது என்பது குறித்து அறிவிப்பு பலகை கூட இல்லை உள்ளிட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி பல்வேறு குறைபாடுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் பாதுகாப்பான உணவை சாப்பிட முடியும் என எச்சரித்து நோட்டீஸ் அளித்தனர்.ஆனால் அதிகாரிகள் கொடுத்த நோட்டீசை ஓட்டல் நிர்வாகத்தினர் கண்டு கொள்ளவில்லை.மேலும்,காலக்கெடு முடிந்த பிறகும் முருகன் இட்லி கடை உணவக தயாரிப்பு கூடத்தில் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து நேற்று மாவட்ட நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையிலான அதிகாரிகள்,முருகன் இட்லி கடை, உணவு தயாரிக்கும் கூடத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 6ந்தேதி சென்னை ஆதம்பாக்கம், என்.ஜி.ஒ காலனி பகுதியை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரன், சென்னை பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் மதிய உணவு சாப்பிட சென்றார் அப்போது,அங்கு சாப்பாட்டில் புழு இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து அவர் உணவக மேலாளரிடம் புகார் கூறிய போது சரிவர பதில் அளிக்காமல், அவமதிக்கும் வகையில் பேசியுள்ளனர். இதனையடுத்து அவரும் ‘வாட்ஸ்அப் செயலி’ மூலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இதனையடுத்து, அந்த கடையை அதிகாரிகள் குழுவினர் கடந்த 7ந்தேதி ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அங்கு பூச்சி தடுப்பு நடவடிக்கை இல்லை என்பதும் உணவு பறிமாறும் ஊழியர்களுக்கு தகுந்த மருத்துவச் சான்றிதழ் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க