June 29, 2020
தண்டோரா குழு
சாத்தான்குளம் பகுதியில் நடை பெற்ற சம்மவம் கடும் கன்டனத்திற்கூறியது, ஆனால் அந்த சம்பவத்தை அரசியலாக்காதீர்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல், முருகன் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல், முருகன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
பாஜக சார்பில் ஓராண்டு சாதனைகளை மாநிலம் முழுவதும் எடுத்து செல்லும் விதமாக ஒட்டுமொத்த நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். சமூக இடைவெளி கடைபிடித்து, வீடு வீடாக சென்று மத்திய அரசின் சாதனைகளை கூறி பொதுமக்களிடம் எடுத்துரைத்து வருகிறோம். கடந்த ஓராண்டாக வரலாற்றில் பிரச்சனைக்குரிய விஷயமாக கருதப்பட்ட பிரச்சனைகள் பாஜக ஆட்சியில் தீர்க்கப்பட்டு உள்ளது.
அயோத்தியில், ராமர் கோவில் விவகாரத்தில் நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருந்தது, அதனை மத்திய அரசு தற்போது சுமூகமான தீர்வு கண்டு உள்ளது. காஷ்மீரில் 370 சட்டத்தை நீக்கி தற்போது அம்மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டன
இஸ்லாமிய பெண்களை முத்தலாக் கொடுத்து விவகாரத்து செய்யும் முறைக்கு முடிவு கட்டியுள்ளது.சி.ஏ.ஏ., பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.
கொரோனோ வைரஸ் இந்த உலகத்தையே மாற்றிக்கொண்டு உள்ளது. மார்ச் மாதம் முழுவதும் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றளவும் அமுலில் உள்ளது. இந்த ஊரடங்கால் மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக ரூ.1.75 லட்சம் கோடி ஒதுக்கீடை மத்திய அரசு செய்துள்ளது. விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கபட்டு வருகிறது.
சந்தன் கணக்கு வைத்துள்ள மகளிருக்கு இரண்டு மாதத்திற்கான பணம் ரூ.500 வழங்கப்பட்டுள்ளது.இது தவிர ரேசன் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 5 பேருக்காவது உணவு கொடுக்க தலைமை அறிவுத்தியது. அதன் பேரில் மோடி கிச்சன் மூலமாக ஒரு கோடி பேருக்கு உணவு பொட்டலம், மோடி கிட் என்ற ரேசன் கிட், 30 லட்சம் கிட் வழங்கப்பட்டுள்ளது.சானிடைசர், முக கவசம் உள்ளிட்டவற்றை இன்னும் பாஜக சார்பில் வழங்கி வருகிறோம்.45 லட்சம் முக கவசங்களை இது வரையில் மக்களின் பயண்பாட்டிற்க்காக இலவசமாக வழம்க்கியுள்ளோம். இன்னும் ஒரு கோடி முக கவசம் கொடுக்கும் பணி நடைபெற உள்ளது, நிச்சயமாக வழங்கபடும்.சாத்தான்குளம் பகுதியில் நடை பெற்ற சம்மவம் கடும் கன்டனத்திற்கூறியது, ஆனால் அந்த சம்பவத்தை அரசியலாக்காதீர்கள்
இவ்வாறு அவர் கூறினார்.