• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாதிப் பற்று இருப்பதில் தவறு கிடையாது – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

December 10, 2018 தண்டோரா குழு

சாதிப் பற்று இருப்பதில் தவறு கிடையாது சாதி வெறி இருக்க கூடாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் அகில இந்திய நாடார் பேரவை சார்பில் நாடார் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர்,

“நாடார் சமூகம் ஆன்மிகம் மற்றும் வணிகம் ஆகியவற்றில் தனித்தன்மை கொண்டது. வெல்லம் உற்பத்தி, கழுதைகள் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று வணிகம் செய்வது ஆகியவை நாடார் சமூகத்தினரிடையே காணப்பட்ட தனித்த அடையாளங்கள். ஷிவ நாடார் அத்தகைய வணிகத் திறமை மூலம் இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனத்தை நிறுவினார்.

எப்படி ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு மரபணு இருக்கிறதோ, அதேபோன்று ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு மரபணு இருக்கிறது. அந்த மரபணுவில் அந்த சமுதாயத்தின் அடையாளங்கள் ஊறி இருக்கிறது. சாதியப்பற்று இருப்பது தவறில்லை. சாதிய வெறிதான் இருக்கக்கூடாது.

அதேபோல், மற்றொரு சாதியை வேரறுப்போம் என்ற எண்ணம் கொண்டிருக்கக் கூடாது. மற்ற சாதிகளும் வளர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. உலகத்தில் எந்த நாட்டிலும் இது கிடையாது.தமிழக சட்டப்பேரவையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த 13 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். முன்பு, 25 எம்எல்ஏக்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துவிட்டது. இந்த நிலைமை மாற வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசினார்.

இந்நிலையில், அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சாதி வெறிக்கு அடிப்படை காரணமாக இருக்கும் சாதிப்பற்று தவறில்லை என அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

மேலும் படிக்க