• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாக்குமூட்டை, அட்டைப்பெட்டிகளில் கட்டு கட்டாக பணம்! துரைமுருகன் ஆதரவாளர்கள் வீட்டில் சிக்கியது பல கோடிகள்?

April 1, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என்று தேர்தல் பறக்கும்படையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து திமுக பொருளாளா் துரைமுருகன் வீட்டில் கடந்த 29, 30 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறைச் சோதனை நடத்தினர்.இந்த சோதனை முடிவில் ரூ.10 லட்சம் மதிப்பில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் வருமான வரித்துறைச் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவா்களுக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினா். இந்த அதிரடி சோதனையில் திமுக பிரமுகர்களின் வீடுகளில் இருந்து சாக்குமூட்டைகளிலும், அட்டைப்பெட்டிகளிலும் வார்டு வாரியாக சப்ளை செய்வதற்கு வசதியாக கட்டுக்கட்டாக அடிக்கி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய பண நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள திமுக பகுதி செயலாளர் சீனிவாசன் வீடு மற்றும் அவரது அக்கா வீட்டில் நடைபெற்ற சோதனையில் 10 கோடி சிக்கியதாக கூறப்படுகிறது.

அதில், சீனிவாசன் வீட்டில் சாக்குமூட்டைகளிலிலும், அட்டைப்பெட்டிகளிலும் கட்டுக்கட்டாக புத்தம்புதிய பண நோட்டுகள் கைப்பற்றுள்ளன. ஒவ்வொரு வார்டுக்கும் யார் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்வது என்ற விவரத்துடன் இந்த பணக்கட்டுகள் இருந்ததால் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதைபோல் துரைமுருகனின் உதவியாளர் அப்சல் அலி என்பவரது வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த பணம் அனைத்தும் கவர்களில் போட்டு வாக்காளர்களுக்கு தருவதற்காக வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து அப்சல் அலி தொடர்பான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

இதனைத் தொடா்ந்து சுதாரித்துக் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கதிர் ஆனந்தின் கல்லூரி துரைமுருகனின் வீடு உள்ளிட்டப் பகுதிகளில் மீண்டும் சோதனையை தொடங்கி உள்ளனா். இதற்கிடையே தனது தேர்தல் பிரசாரத்தை தடுப்பதற்காக ரெய்டு நடப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் துரைமுருகனின் மகன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க