• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

December 11, 2018 தண்டோரா குழு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

பிரபல தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சஞ்சாரம் என்ற நாவலுக்கு 2018ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரைப்படத்திலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார். ஆல்பம், சண்டக்கோழி, அவன் இவன், சமர், சண்டக்கோழி 2, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதைபோல், ராமகிருஷ்ணன் முதலில் வசனம் எழுதியது ரஜினி நடித்த பாபா படத்திற்கு தான். அன்று இவர் ரஜினியின் நண்பராக இருந்து வருகிறார். ரஜினி அடிக்கடி சந்தித்து பேசுவர்களில் ஒருவராக ராமகிருஷ்ணன் இருக்கிறார்.

இந்நிலையில்,ராம கிருஷ்ணன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது தனது நண்பனை ரஜினி அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார். அவருக்கு எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம் நாவலை பரிசாக வழங்கினார்.

மேலும் படிக்க