சவுதி அரேபியாவில் பாகிஸ்தான் பெண்மணியும் அவரது சவுதிநாட்டு கணவரும் தீவிரவாதச் செயல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர். அல்-நஸீம் மாவட்டத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் அவர்கள் பிடிபட்டனர்.
இவர்களையும் சேர்த்து சவுதி அரேபிய நாட்டில் தீவிரவாதச் சதிச் செயல்கள் தொடர்பாக மொத்தம் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சவூதி காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) கூறுகையில்,
“சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் தீவிரவாத செயல்களில் ஈடுப்பட்ட பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் பாத்திமா ரமடன் பலோச்சி மற்றும் அவருடைய கணவர் இருவரையும் குடியிருப்பு பகுதியில் கைது செய்துளோம்” என்றார்.
கடந்த ஜூலை மாதம், ஜெட்டா நகரில் உள்ள சோலைமான் பாகி மருத்துவமனையின் முன் பாகிஸ்தான் தற்கொலை படையை சேர்ந்த அப்துல்லா கல்ஜார் தற்கொலை தாக்குதலை நடத்தினார்.
ஜூலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி அப்துல்லா கல்ஸார் கான் என்ற மனித வெடிகுண்டு தீவிரவாதி ஜெட்டாவில் உள்ள சுலைமான் ஷேக் மருத்துவமனை அருகே வெடித்துச் சிதறினார்.
கடந்த ஜூலை மாதம் முதல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 49 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் சுலைமான் அராப் தீன் மற்றும் நக்க்ஷாபந்த் கான் என்னும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜெட்டா நகரில் உள்ள அல் ஜோவ்ஹாரா மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். ஆனால், பாதுகாப்புப் படையினர் அத்திட்டத்தை முறியடித்தனர்.
சவூதி அரேபியா நாட்டின் உளவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “40 நாடுகளை சேர்ந்த 5,௦85 தீவிரவாதிகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அரேபிய நாட்டை சேர்ந்த 4,254 தீவிரவாதிகள் சவூதி உளவுத்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ஏமன் நாட்டை சேர்ந்த 282 பேர் மற்றும் 218 சிரியர்களும் உள்ளனர். அமெரிக்க நாட்டை சேர்ந்த 3 பேர் மற்றும் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் சிறைகளில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு