November 6, 2017
தண்டோரா குழு
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், அரச குடும்பத்தை சேர்ந்த 11 இளவரசர்கள் மற்றும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் ஆகியோரை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில், முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு, அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இந்நிலையில், இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான புதிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் நிறுவப்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு, சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலுள்ள சிவப்பு கடல் நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அது குறித்து, புதிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், இளவரசர்கள், நான்கு தற்போதைய அமைச்சர்கள் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு,இதையடுத்து, உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் கைது செய்யப்பட்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அரபு நாட்டின் உயர் பதவியில் இருக்கும் அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி ஜெட்டாவிலுள்ள தனியார் ஜெட் விமானங்களை பாதுகாப்பு படைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.