• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச மகளிர் தினத்தன்று கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பெண்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

March 8, 2016 oneindia.com

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பல்வேறு அலுவலகங்களில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

ஏராளமானோர் ட்விட்டர் மூலம் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ள போதிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் ட்வீட்.

அப்படி என்ன கோஹ்லி ட்வீட் செய்துவிட்டார் என்று நினைக்கிறீர்களா. இது தான் அவர் செய்த ட்வீட்,

பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பவர்கள், விசில் அடிப்பவர்கள், போன்ற முட்டாள்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது ட்வீட் மிகவும் வைரலாக பரப்பப்பட்டது. மற்றவர்கள் தவறுக்கு தான் மன்னிப்பு கேட்கும் பழக்கம் உள்ளவர்களே மிகச்சிறந்தவர்கள் எனப் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க