• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் ஹெச்டி பிரிண்டை விரைவில் வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ்

November 5, 2018

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து  விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’.  கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் பல்வேறு தடைகளை தாண்டி வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் நெட்வொர்க் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில்  3715 இணையதளங்களுக்கு தடை விதித்ததோடு படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதித்தும் நீதிமன்றம் உத்திரவிட்டது.

மேலும், இணையதளங்கள் சர்கார் திரைப்படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ஹெச்டி பிரிண்டை விரைவில் வெளியிடுவோம் என்று படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சவால் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க