• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் பட விவகாரம் – அரிவாளுடன் மிரட்டல் : வீடியோ வெளியிட்ட 2 பேர் கைது

December 7, 2018 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார். இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும், அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் திரையங்கிகளில் வைப்பட்டுள்ள விஜயின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால்,சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியது.

தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கஷ்டபட்டு வைத்த பேனர்களை அதிமுகவினர் கிழித்ததால் அவர்கள் பெரும் மனவருத்தத்தில் உள்ளனர். இதற்கிடையில், இரண்டு விஜய் ரசிகர்கள் லுங்கி கட்டிக் கொண்டு கையில் ஆளுக்கொரு வீச்சரிவாளை பிடித்தபடி அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து, சென்னை போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், மிரட்டல் விடுத்த சஞ்சய் என்பவரை கைது செய்த போலீசார் தலைமறைவாகி விட்ட லிங்கதுரை என்பவரை தேடி வருகின்றனர். வீடியோவை எடுத்த அனிஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க