• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

July 9, 2019 தண்டோரா குழு

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரவண பவன், சென்னை கிளையில் பணிபுரிந்து வந்த துணை மேலாளரின் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைபட்டுள்ளார் ராஜகோபால். ஜீவஜோதிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்கவில்லை. அந்த சமயத்தில் ராஜகோபாலுக்கு, இரண்டு மனைவிகள் இருந்தது. இதையடுத்து 1999 ஆம் ஆண்டு ஜீவஜோதி, சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜகோபால், இளம் தம்பதியை விவாகரத்து செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு, ஜீவஜோதி மற்றும் சாந்தகுமார் தம்பதி, ராஜகோபால் தரப்பிடமிருந்து தங்களுக்கு மிரட்டல் வருவதாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் அளிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் சாந்தகுமார் கடத்தி கொல்லபட்டார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அந்த வழக்கில் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தனக்கு விதிக்கபட்ட தண்டனையை எதிர்த்து ராஜகோபால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது 2009 ஆம் ஆண்டு, அவருக்கு வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதன் பின் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளர் பி.ராஜகோபாலுக்கு (P Rajagopal) ஆயுள் தண்டனையை சில நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கிடையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையின்படி ராஜகோபால், 2 நாட்களுக்கு முன்னர் சரணடைந்திருக்க வேண்டும். ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார் ராஜகோபால். இது குறித்து உச்ச நீதிமன்றத்திடமும் தெரிவத்து, சரணடையும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரினார். அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள நீதிமன்றம், உடனடியாக சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மாலை ராஜகோபால் ஸ்ட்ரெச்சரில் வந்து சரணடைந்தார். சாந்தகுமார் கொலை வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை பெற்ற ஜனார்த்தனன் என்பவரும் ஆம்புலன்சில் வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து, இருவரையும் புழல் சிறையில் அடைக்கப்பட நீதிமன்றம் உத்திரவிட்டது.

மேலும் படிக்க