• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமோசா விற்பவரின் மகன் ஐஐடி நுழைவுத் தேர்வில் சாதனை

June 13, 2017 தண்டோரா குழு

ஐஐடி நுழைவுத் தேர்வில், சமோசா விற்பவரின் மகன், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் ஐஐடி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதன்படி, நடப்பாண்டில் நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.இதில், ஐதராபாத்தைச் சேர்ந்த சமோசா விற்கும் சுப்பாராவின் மகன் மோகன் அப்யாஸ், அகில இந்திய அளவில் 64-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதுகுறித்து மோகன் அப்யாஸ் கூறுகையில்,

முதல் 50 இடங்களுக்குள் வந்துவிடுவேன் என்று நினைத்தேன். அதனால், முடிவுகள் வெளியானவுடன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால், இப்போது சந்தோஷமாக உணர்கிறேன்.ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறையில் ஆய்வு பட்டம் படிக்க உள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் தன்னுடைய முன்னுதாரணம் என தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வெற்றிக்கு காரணமான தனது பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான் என்று கூறினார்.

மேலும் படிக்க