ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது சமூக விரோதிகளின் திட்டத்தை முறியடித்து மாணவர்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளனர் என பா.ஜ.க. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தருண் விஜய் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது;
“தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆதரித்து நடைபெற்ற போராட்டம் வெற்றியடைந்ததை அடுத்து மாணவர்கள் அமைதியாக கல்லூரிகளுக்குச் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் மோடி துரித நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால், அது சரியாக மக்கள் மத்தியில் சென்றடையாததே குழப்பங்களுக்குக் காரணம்.
மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றது முதல் தமிழ் கலாசாரத்துக்கு அதிக முக்கியதுவம் அளித்து வருகிறது. திருக்குறள் மக்களைவையில் வாசிக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை உத்தரா கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நிறுவப்பட்டது. திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தும் விதமாக திருப்பயணம், கங்கா பயணம் என சிறப்பு திட்டங்கள் மோடி அரசின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம் மட்டுமல்ல, அது இந்தியாவின் கலாசாரம. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது சமூக விரோதிகளின் திட்டத்தை முறியடித்து மாணவர்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளனர். தமிழர்களின் கலாசாரத்துக்குத் தலை வணங்கி, பெருமைப்படுகிறேன்”
இவ்வாறு தருண் விஜய் கூறினார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது