• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய பெண்ணை கைது செய்யக்கோரி புகார்

August 31, 2019 தண்டோரா குழு

அருந்ததிய மக்களை மிகவும் அபாசமாகவும், வன்முறையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளங்களில் பேசி பதிவிட்ட பெண்ணை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை எடுத்து அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டனர். சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு பரப்பி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. சிலர் கைது செய்யப்பட்டாலும் இது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் பெண் ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளில் கொச்சைப்படுத்தி, சாதிக்கலவரத்தை உருவாக்கும் வண்ணம் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இது தாழ்த்தப்பட்ட மக்களிடம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி அவதூறாக பேசிய பெண்ணை எஸ் சி எஸ் டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யக்கோரி சமூக ஆர்வலர் பெரியார் மணி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

மேலும் படிக்க