• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமக தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது -சரத்குமார் பேட்டி

February 1, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறந்த ஆளுமையாக செயல்பட்டு தமிழகத்தில் ஆட்சி புரிந்து வருவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செல்வபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது அதே நேரத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை இன்றும் தொடங்கப்படவில்லை என தெரிவித்தார். அதுபோல் தமிழகத்தில் இரண்டு ஆளுமைகள் இல்லாத நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறந்த ஆளுமையாக செயல்பட்டு தமிழகத்தை வழி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு மாணவர்களுக்கு 2 ஜிபி நெட் இலவசமாக வழங்கும் திட்டம் சிறப்பானது என்றும் இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறினார். அதேபோல் தமிழக அரசின் 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு மூலமாக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகி அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு தமிழக அரசை பாராட்டுவதாகவும் அதேநேரத்தில் அதில் உள்ஒதுக்கீடு கூறும் பாமக தலைவர் ராமதாசின் கொள்கையில் கருத்து வேறு படுவதாகவும் தெரிவித்தார். மேலும் திமுக, சரத்குமாருக்கு துரோகம் செய்ததா என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அப்படி ஒரு சூழ்நிலையை திமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு தான் எத்தனை தொகுதிகளில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவது என தெரியும் என்றார்.

மேலும் படிக்க