• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலை விவகாரம்: கேரளாவில் தொடரும் பதற்றம் – 750 பேர் கைது

January 4, 2019 தண்டோரா குழு

கேரளாவில் முழுஅடைப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 750 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன.

உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையில், நேற்று கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் நேற்று அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.இதையடுத்து, ஒரு மணி நேரம் நடை மூடப்பட்டு பரிகாரப் பூஜைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது.

இதையடுத்து, சபரிமலையின் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் இறங்கியது.

சபரிமலையில் பெண்களை அனுமதித்தை கண்டித்து, சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பு சார்பில், கேரள மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. போராட்டத்தின்போது, சாலைகளில் ஊர்வலமாக வந்த பாஜகவினரை, கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழிமறித்துத் தாக்கினர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்தது.

இதேபோன்று மாநிலம் முழுவதும் நடந்த வன்முறையில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனால் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.நேற்று மாலைவரை, வன்முறையில் 30 போலீசார் காயமடைந்தனர். இதுவரை 750 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதன் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தற்போது நிலைமை ஓரளவு சீராகி, பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. இதற்கிடையில் கேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க முதல்வர் பினராயி விஜயனுக்கு, ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க