• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சபரிமலை கோவிலுக்கு சென்ற கனகதுர்காவை வீட்டை விட்டு துரத்திய குடும்பத்தினர்

January 23, 2019 தண்டோரா குழு

சபரிமலை கோவிலுக்கு சென்ற கனகதுர்கா, நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களுக்கும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க போன்ற கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டு கலவரம் நடந்தது. இதைத் தொடர்ந்து கனகதுர்காவும், பிந்துவும் போலீஸ் பாதுகாப்புடன் தலைமறைவாக வாழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கனகதுர்கா அவரது வீட்டில் இருந்த போது அவரது உறவினர்களால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்திரவு படி அவருக்கு தற்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவரை, ‘கோயிலுக்குள் நுழைந்து சடங்குகளை மாற்றியா காரணத்தால் அனைவர் முன்னிலையிலும் பொது இடத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என கூறி அவரது குடும்பத்தாரே விரட்டியடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஒரு விடுதி ஒன்றில் தற்போது கனகதுர்கா குடியேறியுள்ளார்.

மேலும் படிக்க