மனித உடலில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் சக்தி தன்னிடம் உண்டு என்றும் தன்னை இந்தியாவின் மந்திரவாதி என்றும் ஒரு பெண் கூறிக்கொண்டு வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோரியா என்னும் இடத்தில் பழங்குடி பெண் புலேஷ்வரி தேவி(45) வசித்து வருகிறார். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் தன்னிடம் இருப்பதாகவும், தன்னிடமுள்ள மந்திர வாளால், மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணமாக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். இதனால், கோரியா பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுடைய நோய் குணமாகும் என்று அவரிடம் செல்கின்றனர்.
வலி நிவாரணம், உடைந்த எலும்புகள் மற்றும் குழந்தையின்மை ஆகிய உபாதைகளுக்கு தீர்வு காண பல இடங்களிலிருந்து மக்கள் வருகின்றனர்.கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் மக்கள் இந்த மூடநம்பிக்கை பின்பற்றி வருகின்றனர்.
ராமதேவி(27) என்பவர் தனது கண்ணில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரிடம் சென்றுள்ளார். அவருடைய கண்களில் வாள்கள் சொருகப்பட்டு, அவருக்கு அளித்த சிகிச்சையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவர் கூறுகையில், “என்னுடைய கண்ணில் பிரச்சனை உண்டு. கடந்த 3 ஆண்டுகளாக புலேஷ்வரி தேவியை சந்தித்து வருகிறேன்.வாளை பயன்படுத்தி செய்யும் சிகிச்சைக்கு பிறகு முன்பிருந்ததை விட என்னுடைய கண்ணில் பிரச்சனைகள் குறைந்திருக்கிறது.என்று கூறினார்.
ராம் பிரசாத்(33) என்னும் உள்ளூர் வாசி கூறுகையில்,
“உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் புலேஷ்வரி தேவி குணப்படுத்துவாள். அவளால் குணப்படுத்த முடியாதது ஒன்றுமில்லை” என்று கூறினார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது