• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்தமாக வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்ற சொன்ன சிறுமியை தாக்கிய வாலிபர்

October 21, 2017 தண்டோரா குழு

மும்பையில் நண்பர்களுடன் சத்தமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவரிடம், சத்தமாக வாக்குவாதம் செய்யவேண்டாம் என்று கூறிய 16 வயது பெண்ணை தாக்கிய காணொளி சமூகவலைதளங்களில் வைராலாக பரவி வருகிறது.

மகாராஷ்ரா மாநிலத்தின் மும்பை நகரின் குர்லா நேரு நகரை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது தோழியுடன் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7 மணியளவில், பயிற்சி வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்தாள். அப்போது ஒரு ஆட்டோ ஒன்றில் அமர்ந்திருந்த இம்ரான் சாய்க் என்னும் வாலிபன், அவனுடைய நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தான். இதை கவனித்த அந்த சிறுமி, தனக்கு அறிமுகமாய் இருந்த அந்த வாலிபனிடம் சத்தமாக வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளாள்.

இதனால் கோபம் அடைந்த அந்த வாலிபன், அந்த சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளான். இந்த தாக்குதலில் அந்த சிறுமியின் மூக்கில் பழத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவள் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தாள். இதையடுத்து அந்த சிறுமியை மிரட்டிவிட்டு, இம்ரான் அங்கிருந்த தப்பியுள்ளான். இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் அந்த சிறுமிக்கு உதவி செய்யவோ அல்லது இம்ரானை தடுக்கவும் முன் வரவில்லை. இந்த சம்பவம், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. தற்போது இந்த சம்பவத்தின் காணொளி இணையதளத்தில் வைராலாக பரவி வருகிறது.

அந்த சிறுமியை அருகிலிருந்த மருத்துவமனையில் சிலர் சேர்த்துள்ளனர். அவளுக்கு மருத்துவர்கள்சிகிச்சை அளித்து வருகின்றனர். இம்ரான் தாக்கியதில் அந்த சிறுமியின் மூக்கின் எலும்பு உடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இம்ரானை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். ஆனால், அவனுக்கு உடனே ஜாமீன் கிடைத்து, விடுதலை அடைந்துள்ளான்.

மேலும் படிக்க