• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டவிரோதமாக செங்கல் கொள்ளையில் ஈடுபட்ட லாரி பறிமுதல்

November 28, 2021 தண்டோரா குழு

கோவை தடாகம், பகுதியில் செங்கல் சூளைகளில் மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மாங்கரை அடுத்த தைல மர பேருந்து நிறுத்தம் அருகே தனியார் செங்கல் சூளை (RSV chamber) ஒன்றில் சட்டவிரோதமாக செங்கற்களை கடத்துவதாக தடாகம் காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்றது.

அப்போது லாரி(TN38CM 6280) ஒன்றில் செங்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியின் ஓட்டுநர் தப்பி செல்ல லாரி மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு தடாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த தடாகம் காவல்துறையினர் ஓட்டுநர் மற்றும் செங்கல் சூளை உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க