• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டம் ஒழுங்குசீர்கெட்டுக் கிடக்கிறது – விஜயகாந்த்

May 20, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் முழுவதும் சீர்கெட்டுக் கிடக்கிறது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் புகார் கூறியுள்ளார்.

சிவகங்கை கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தை பார்வையிட வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“தமிழகத்தில்தான் ஒரே ஓட்டுக்கு மூன்று முதல்வர்கள் கிடைத்துள்ளனர். ஜெயலலிதா மறைந்துவிட்டார். அப்புறம் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார்.

இந்தியாவில் வேறு எங்காவது இப்படி ஒரு நிலையை நீங்கள் பார்த்துள்ளீர்களா.தமிழகத்தில் மட்டும்தான் இப்படி. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் முழுவதும் சீர்கெட்டுக் கிடக்கிறது.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அக்கறை செலுத்தவில்லை.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு யார் வந்தாலும் மக்கள் ஏற்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற வாய்ப்பே இல்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க