• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிட முடியாது- உயர்நீதிமன்றம்

April 27, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்றக்கோரிய திமுகவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்தை கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதிசபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது படத்தை திறக்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சட்டசபையில் இருந்து ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்ற வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் பெஞ்ச் அடங்கிய அமர்வு இன்று விசாரித்து. அப்போது, சபாநாயகரின் நிர்வாக முடிவில் நீதிமன்றம தலையிட முடியாது என இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க