• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்

March 20, 2018 தண்டோரா குழு

வி.எச்.பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் அமளியில் ஈடுபட்டதால் திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தில் வி.எச்.பி. ரத யாத்திரைக்கு கண்டனம் தெரிவித்து ரத யாத்திரைக்கு எதிராக திமுக  சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

மேலும், ரத யாத்திரை குறித்து டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும் என   வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் இது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? விமர்சனம் செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி இது தொடர்பாக விளக்கமளித்தார். ரத யாத்திரை விவகாரத்தில் முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.  ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் முழக்கம் எழுப்பியதால் திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கு வெளியே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டனர்.

அவையை நடத்த ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும்: சபாநாயகர் எச்சரிக்கை

மேலும் படிக்க