• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யபட்ட சுபேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

October 12, 2017 தண்டோரா குழு

இந்துமுன்னனி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய சுபேரை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு தனிப்படையினர் கைது செய்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இந்துமுன்னனி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுப்பிரமணியபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து தேடப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சதாம் உசேன் மற்றும் முபாரக் ஆகிய இருவரைப்பற்றியும் துப்பு கொடுத்தால் பரிசு தரப்படும் என தென்னிந்தியா முழுவதும் காவல்துறை விளம்பரபடுத்தியது.இதனையடுத்து சதாம் உசேன் மற்றும் அபுதாகீரை சிறப்பு புலனாய்வு படையினர் கைது செய்தனர்.

இதில்,அபுதாகீர் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். இதற்கிடையில் சதாம் உசேன் கைது செய்யப்பட்டபோது தலைமறைவான கோவை உக்கடம் கோட்டைப்புதூர் பகுதியைச்சேர்ந்த சுலைமானின் மகன் சுபேரை சிறப்பு புலனாய்வு படையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து ஒலவக்கோட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பும்போது பொள்ளாச்சி கோவில்பாளையம் அருகே உள்ள முள்ளுப்பாடி கேட்டில் வைத்து சிறப்பு புலனாய்வு படையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். சுபேர் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒலவக்கோடு அருகேயுள்ள அப்ஹோல்சரி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.இவரை விசாரித்தபின் கைது செய்த சிறப்பு புலனாய்வு படையினர் அவரை இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது, சுபேரை வருகின்ற 26ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதனையடுத்து சிபிஐடி யின் சிறப்பு தனிப்படயினர் காவலில் சுபேரை எடுத்து விசாரிக்க மனு அளித்தனர்.அதன் மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.இதைதொடர்ந்து பலத்த பாதுகாப்போடு சுபேர் கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க