• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – முதல்வர் பழனிச்சாமி

November 18, 2020 தண்டோரா குழு

சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ,

நீட் தேர்வு கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நீட் தேர்வை நடத்த வேண்டியதாகி விட்டது. இருப்பினும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அதிமுக அரசால் வழங்கப்பட்டது. இதனால் இன்று 313 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இருக்கிறார்கள் சென்ற ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 6 பேர்தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.

சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விசாரணைக் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. விசாரணைக் கமிஷன் முடிந்த பின்புதான் எதையும் கூற முடியும்.பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இந்த ஆண்டு பத்தாவது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு அதைப் பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றார்.

மேலும் படிக்க