• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா சொல்படி ஆட்சி நடத்தவில்லை எனக் கூற தயாரா ? அமைச்சர் ஜெயகுமாருக்கு சாருஹாசன் கேள்வி

July 20, 2017 தண்டோரா குழு

குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம் என்று நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுக் குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

“அமைச்சர் ஜெயகுமார் அவர்களுக்கு, 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள். குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம்.கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.

ஒன்று புரிகிறது அதிமுகவில் ஜெயகுமார் ஒருவர்தான் இதுவரை லஞ்சம் வாங்காதவர் போல தெரிகிறது.ஆனால் ஊழலுக்கு இன்று துணை போகிறாரே. ஆட்சியில் இருக்கும் அமைச்சர் வீட்டில் ரெய்டு, பிரபல காண்ட்ரக்டர்கள் வீட்டில் கிடைத்த லஞ்ச லிஸ்ட்,நீங்கள் வணக்கத்துடன் நடத்தும் ஆட்சி லஞ்ச ஊழலுக்கு சிறையிலிருக்கும் சசிகலா சொல்படி நடக்கவில்லை என்று கூட சொல்ல முடியவில்லை”.
இவ்வாறு சாருஹாசன் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க