August 21, 2017
தண்டோரா குழு
பெங்களூரு சிறையில் சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில் வலம் வரும் புதிய வீடியோ ஆதாரத்தை சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா வெளியிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் சிறையில் சாதரணமாக உலாவுவது போல் வீடியோவும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரூபா,லஞ்ச ஒழிப்பு துறையிடம் புதிய வீடியோ ஆதாரம் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் சசிகலாவும், இளவரசியும் கலர் உடையில் சிறையின் நுழைவாயில் வழியாக சிறைக்குள் வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் ஆண் நடமாடுவதும் இடம்பெற்றுள்ளது.
சசிகலா மீதான புகார் தொடர்பாக தொடர்ந்து வீடியோ ஆதாரங்கள் வெளியாகி வருவதாள் சசிகலா தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் என சசிகலா ஆதரவு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.