• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம்

April 15, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன். அவருக்கு வயது 47. இவர் திருவிடைமருதூர் கோயிலுக்கு இன்று காலை சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.இவர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க