May 29, 2017
தண்டோரா குழு
ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சுந்தர்.சி இயக்கத்தில் தமிழில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் சங்கமித்ரா. வரலாற்று படமான இப்படத்தில் ஆர்யா,ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து,தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில்,
தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசனுடன் சங்கமித்ரா படத்தில் தொடர்ந்து பணிபுரிய முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.எனினும் படத்திலிருந்து அவர் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதன் காரணம் என்ன என்று அறிவிக்கப்படவில்லை.
இப்படத்திற்காக ஸ்ருதிஹாசன், லண்டனில் வாள் வீச்சு, சண்டைப் பயிற்சி எல்லாம் பெற்று வந்தார் என்பது குறிபிடத்தக்கது.