• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சகதியில் சிக்கி தவிக்கும் கோவை சி.எம்.சி., காலனி -தவிக்கும் தூய்மைப்பணியாளர்கள்

September 4, 2020 தண்டோரா குழு

கோவை வெரைட்டி ஹால் ரோடு சி.எம்.சி., காலனி மக்கள் குடியிருக்கும் கூடாரத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் அவதிப்படுகின்றனர். வீட்டை சுற்றிலும் நாறும் சகதியின் மத்தியில் நடக்கிறது இவர்களின் வாழ்க்கை.

கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள சி எம் சி காலனி அடுக்குமாடி குடியிருப்பு பழுதடைந்து இருப்பதால் முழுமையாக இடித்து விட்டு புதிதாக கட்டிக்கொடுக்க குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது.அருகில் உள்ள மைதானத்தில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கி கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. 300 குடும்பத்தினர் கூடாரம் அமைத்து வசிக்கின்றனர். மற்றவர்கள் வாடகை வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

கடந்த இரு நாட்களாக பெய்த மழைக்கு மைதானத்தில் தண்ணீர் தேங்கியது சேறும் சகதியுமாக மாறி உள்ளது.கூடாரத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் தங்க இடமின்றி அவதிப்படுகின்றனர்.உடைமைகள் மழை நீரால் நனைந்துள்ளன.குழந்தைகளும் பெரியவர்களும் அவதிப்படுகின்றனர்.குடிநீர் குழாய்களும் மழை நீர் தேங்கிய குழிக்குள் இருக்கிறது.குழிக்குள் இறங்கி தண்ணீர் பிடிக்க வேண்டிய உள்ளது குடிநீரோடு கழிவுநீர் கலக்கும் அபாயம் இருக்கிறது.மழை நீர் வழிந்தோடிச் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

மாநகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்களே இங்கு வசிக்கிறோம்.எங்களுக்கு போதிய வசதி செய்து கொடுப்பது இல்லை பாலடைந்த குடியிருப்பு இடிந்து விட்டு புதிதாக கட்டி கொடுக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும் அதுவரை கூடாரத்தில் தான் வசிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் எங்கள் நிலைமை நன்கு தெரிந்து மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் நாங்களும் மனுஷங்கதானே என்றனர்.

மேலும் படிக்க