November 21, 2025
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி ஓம்னி-சேனல் எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிறுவனமான க்ரோமா தனது வருடாந்திர ‘பிளாக் ஃப்ரைடே’ விற்பனையை அறிவித்துள்ளது.
இதில் இந்த மாபெரும் விற்பனைக் கொண்டாட்டத்தில் பல்வேறு பிரிவுகளிலான தயாரிப்புகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. க்ரோமாவின் இந்த பிளாக் ஃப்ரைடே விற்பனையானது நவம்பர் 22-ம் தேதி தொடங்கி நவம்பர்30-ம் தேதி 2025 வரை நடைபெறும். ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் முதல் தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள், ஆடியோ சாதன ங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை, புத்தாண்டுக்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அவசியமான ஸ்மார்ட் பொருட்களை வாங்கவும், அதிக அளவில் சேமிக்கவும் ஏற்ற வகையில் பிரத்தியேக சலுகைகளை க்ரோமா வழங்குகிறது.
ஸ்மார்ட்ஃபோன்களுக்கான கவர்ச்சிகரமான சலுகைகளாக, ஐஃபோன் 16 (128 ஜிபி) ஆரம்ப விலை ரூபாய் 39,990 மட்டுமே , ஐஃபோன் 17 (256 ஜிபி)ஆரம்ப விலை ரூபாய் 45,900 மட்டுமே, ஐஃபோன் ஏர் (256 ஜிபி) ஆரம்ப விலை ரூபாய் 54,900 மட்டுமே, ஒப்போ எஃப் 31 5ஜி (8ஜிபி|128ஜிபி)விலை ரூபாய் 21,600 மட்டுமே,ஒன்பிளஸ் 13R (12ஜிபி+256ஜிபி) ஆரம்ப விலை ரூபாய்.37,999 என்ற சலுகையில் க்ரோமா வழங்குகிறது.
தொலைக்காட்சிகளுக்கான அட்டகாசமான சலுகைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங், டிசிஎல் மற்றும் ஹையர் தொலைக்காட்சிகளுக்கு 50% வரை தள்ளுபடி. 55-அங்குல தொலைக்காட்சி அல்லது அதற்குக் குறைவான அளவுள்ள ஏதேனும் ஒரு தொலைக்காட்சியை வாங்கும்போது, ரூபாய் .26,990 மதிப்புள்ள எல்ஜி சவுண்ட்பார்-ஐ வெறும் ரூபாய் .11,490-க்கு பெறலாம்.ரூபாய்.1,24,300 மதிப்புள்ள சாம்சங் 75-அங்குல 4 கே எல்இடி யுஹெச்டி தொலைக்காட்சியை வெறும் ரூபாய்க்கு வாங்கலாம்.ரூபாய் 47,500 மதிப்புள்ள க்ரோமா 55-அங்குல எல்இடி யுஹெச்டி தொலைக்காட்சியை வெறும் ரூபாய்.31,990-க்கு வாங்கலாம்.சாம்சங் டிஎல் சலவை இயந்திரங்களின் விலை ரூபாய் 16,416 முதல் தொடங்குகிறது.
முன்புறமாக துணிகளை சலவைக்கு போடும் சாம்சங் 8கிகி ஃப்ரண்ட் லோட் சலவை இயந்திரத்தின் விலை ரூபாய் 30,628 முதல் தொடங்குகிறது. மேக்புக் ஏர் எம்4 மடிக்கணி ஆரம்ப விலை – ரூபாய் 55,911-ல் தொடங்குகிறது. சாம்சங் நெக்ஸ்ட் ஜென் ஏஐ பிசி – ரூபாய்.54,741.லெனோவோ i5 ஹச் பிராசஸர் ஆரம்ப விலை – ரூபாய்.44,950
இந்த விற்பனை குறித்து இன்ஃபினிட்டி ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
“பிளாக் ஃப்ரைடேதற்போது இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாப்பிங் வாரங்களில் ஒன்றாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டு, வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் தங்களது இல்லங்களில் உள்ள மின்சார மற்றும் மின்னணு சாதனங்களை தரம் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அர்த்தமுள்ள விலை தள்ளுப்படி சலுகைகள் மற்றும் எளிதாக மேற்கொள்ளக்கூடிய தவணை முறை கட்டணங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ஆன்லைன் மற்றும் விற்பனை நிலையங்களில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான தயாரிப்புகள், பல்வேறு எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வங்கிச் சலுகைகள் மற்றும் மாதாந்திர தவணை முறையின் பலன்களுடன், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற மிகச் சரியான தயாரிப்புகளை மிகச் சரியான விலையில் கண்டறிய உதவ நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார்.