• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்ரீ சக்தி இன்ஜி. கல்லுாரியில் களைகட்டிய ‘களம் 2019’ விழா

March 2, 2019 தண்டோரா குழு

சின்னியம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியில் ‘களம் 2019’ கலை விழா இன்று நடைபெற்றது.

கோவை சின்னியம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளது. இக்கல்லூரியில் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் களம் கலை விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான களம் 2019’ கலை விழாவை முன்னிட்டு, கடந்த பிப்.,28 ம் தேதி முதல் மாணவ மாணவிகளுக்கான இன்ஜி.,துறை சார்ந்த வினாடி வினா, தொழில்நுட்ப கருத்தரங்கு, தகவல் தொழில்நுட்பம், சிவில், பயோமெடிக்கல், மெக்கானிக்கல், குறும்படம், புகைப்பட என 60க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின், இறுதிநாளான இன்று பாரம்பரிய நடனம், பாட்டு, வீதி நாடகம் போன்ற இசை கச்சேரிகள் நடைபெற்றது. இது பார்வையாளர்களாக வெகுவாக கவர்ந்தன.

இந்நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். மேலும், இவ்விழாவில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் தாளாளர் தங்கவேலு, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க