• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மகளிர் தினவிழா

March 8, 2018 தண்டோரா குழு

சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு  கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  எஸ்.என்.ஆர். கலையரங்கில்  மகளிர் தினவிழா கொண்டாப்பட்டது.

கல்லூரியின்  முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணாகரன்  தலைமையேற்ற  இவ்விழாவில் கோயமுத்தூர் “பயோடா டெக்னாலஜிஸ் – ன் மனிதவள மேம்பாட்டுத்துறை துணைத்தலைவர் விஜயலட்சுமி, சமூக ஆர்வலர் தூய்மை இந்தியா திட்டத்தின் கோவை தூதர் தஸ்லிமா நஸ்ரின், கௌமார பிரசாந்தி அகாடெமியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ், பத்மஸ்ரீ . நானம்மாள்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய   கோயமுத்தூர் “பயோடா டெக்னாலஜிஸ் – ன் மனிதவள மேம்பாட்டுத்துறை துணைத்தலைவர்  விஜயலட்சுமி,

பொறுமை, நேர்மறை எண்ணங்கள், மன்னிக்கும் குணம் இன்றைய பெண்களுக்கு அவசியம் என்றும் இதனை கடைபிடிக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க இயலும்  எனக் கூறினார்.

இவ்விழாவில்   பத்மஸ்ரீ  நானம்மாளின்  யோகாசன செய்முறையும் நிகழ்த்தப்பட்டது. மேலும்,  மாணவிகளுக்கும், பேராசிரியைகளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க