• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வேளாண் பல்கலைகழகத்தில் பூகம்ப கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

April 5, 2019 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பூகம்ப கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

அரக்கோணத்தில் அமைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 4வது படையணி சார்பில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பூகம்ப கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பூகம்பம் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், இது போன்ற பேரிடர் சமயங்களின் போது காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது, பேரிடர் காலங்களின் போது செய்யக்கூடாதவை குறித்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பேரிடர் குழு உறுப்பினர்கள் நேரடி பயிற்சி அளித்தனர்.
இதையடுத்து நிகழ்ச்சியின் முக்கிய பகுதியான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 38 பேர், அதிவிரைவுப்படையை சேர்ந்த 28 பேர், தீயணைப்பு துறையை சேர்ந்த 8 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 28 பேர், கோவை மாவட்ட ஊர் காவல் படையை சேர்ந்த 30 பேர், செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த 5 பேர், வனத்துறையை சேர்ந்த 30 பேர், உள்ளூர் பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 36 பேர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பூகம்பம் ஏற்பட்டவுடன் அடிக்கும் எச்சரிக்கை ஒலியுடன் துவங்கிய ஒத்திகை நிகழ்ச்சியின் போது இடிபாடுகளில் சிக்கியவர்களை கயிறுகள் கட்டி மீட்பது, தீயணைப்பு துறையினர் தீயுடன் போராடுவது, நவீன உபகரணங்களை கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபடுவது, மருத்துவ குழுவினருக்கு வழி ஏற்படுத்துவது, குழந்தைகள் மீட்பு, அவசர காவல் முதலுதவி சிகிச்சை வழங்குதல் உள்ளிட்டவை தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய பல்கலைகழக துணை வேந்தர் குமார்,

இந்த ஒத்திகை நிகழ்ச்சி மாணவ மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் பல்கலைகழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்தார்.நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி அரக்கோணம் படையணியின் தலைவர் ரேகா நம்பியார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி அளிக்கும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம் என குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியை பரவசத்துடனும் ஆச்சரியத்துடனும் கண்டு ரசித்த மாணவி சங்கவி கூறும்போது,

இது பயனுள்ள வகையில் இருந்ததாகவும் பேரிடர் காலங்களின் போது நம்மை மட்டுமல்லாமல் உடனிருப்பவர்களையும் காக்க இது உதவும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் கடந்த 1900 ஆண்டு சித்தூரை மையமாக கொண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். நூறாண்டுகளுக்கு ஒரு முறை பூகம்பம் நேர்த்த இடத்தில் மீண்டும் பூகம்பம் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் பூகம்ப எச்சரிக்கையில் மூன்றாவது ஜோன் எனப்படும் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியில் அமைந்துள்ள கோவையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க