• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு

May 25, 2025 தண்டோரா குழு

கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கல்லூரி வாழ்க்கையில் கிடைத்த நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று சொல்வார்கள். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் தங்களது கல்லூரி வாழ்க்கையில் நினைவு கூர்ந்தால் அந்த கவலைகள் மறந்து போகும். அந்த அளவிற்கு கல்லூரி வாழ்க்கை இனிதானது.

பல்கலையில் படிக்கும் போது ஏற்பட்ட நட்புகள் வாழ்கை சூழலில் திசை மாறி சென்று விட்ட நிலையில் மீண்டும் அந்த வாழ்க்கை மீண்டும் ஒருநாள் கிடைத்து விடாதா என ஏங்கும் நாட்கள் பலருக்கும் இருக்கும். அதற்கு ஏற்றார் போல கோவை வேளாண் கல்லூரியில் 1995ம் ஆண்டு பேட்ஜ் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில்:

நாங்கள் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள வேளாண்மை பல்கலைகழகத்தில் படித்த 95 பேட்ஜ் மாணவர்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.தங்களது குடும்பங்கள், படிக்கும் போது ஏற்பட்ட சிலிர்பான அனுபவங்களை உயிர்ப்புடன் பகிர்ந்து கொண்டனர்.

அந்த கால பல்கலைகழக நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.தங்களுக்கு பாடம் நடத்தி, வாழ்க்கையில் சிறக்க செய்த ஆசிரியர்கள் பற்றி பேசி பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு ஒருவரை ஒருவர் கட்டி அனைத்து பாசத்தை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர். கடல் கடந்து தேசம் வீட்டு சென்றாலும் தங்களை ஒன்று சேர்ந்த பெருமை கல்விக்கு மட்டுமே சாரும் என்றபடி இளமை துள்ளளோடு ஒடி விளையாடி மகிழந்தனர் இந்த மாணவர்கள்.

மேலும் படிக்க