• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விழாவை முன்னிட்டு குறிச்சி குளத்தில் நவீன மரக்கப்பல்

January 4, 2020

கோவை விழாவை முன்னிட்டு கோவை குளத்தில் நவீன பாய் மரக் கப்பல்கள் விடப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து சென்றனர்.

கோவை மாவட்டம் உருவான தினத்தை கொண்டாடும் வகையில் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 12 வது கோவை விழா நடைபெற்று வருவதன் ஒரு பகுதியாக இந்திய கப்பல் படை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து , கோவை குறிச்சு குளதில் சர்வேதேக பந்தயங்களில் கலந்துகொள்ளும் பாய் மரக்கப்பல்கள் விடப்பட்டது.

இந்த விழாவில் ஐ.என்.எஸ் அக்ரானி கோவை பிரிவின் கப்பல் படை அதிகாரி அசோக் ராய் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். குளத்தில், எண்டர்பிரஸ், லேசர், ஆப்டிம்க்ஸ், விண்ட் சர்ப்வ் , கையாக்கீஸ் போன்ற பாய்மரக் கப்பல்களை, பயிற்சி பெற்ற வீரர்கள் இயக்கினர். இந்திய கப்பல் படை குறித்து தெரிந்து கொள்ளும் வகையிலும் சர்வதேச படகு போட்டி மற்றும் குளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கோவை குளத்தில் முதன் முறையாக சர்வதேச பாய்மரக் கப்பல் விடப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் படிக்க