• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விழாவால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முக்கிய இடங்கள்

January 5, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் விழாவின் ஐந்தாம் நாளில் கோவையில் உள்ள முக்கிய இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவை மாநகரம் வண்ண விளக்குகளால் மிளிர்ந்தது.

கோவை நகரில் பிரபலமான மற்றும் முக்கிய கட்டிடங்களில் ஜனவரி 5 முதல் 10 ம் தேதி வரை வண்ண விளக்குகளால் கோவை நகர் ஒளிர்வதை காணலாம்.

1. மணிக்கூண்டு கடிகார கோபுரம்
2. லட்சுமி மில்ஸ் வளாகம்
3. பி எஸ் ஜி டெக் & ஐ . எம்

இந்த நிகழ்வை வரும் ஆண்டுகளில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவுடன் கோயம்புத்தூர் நகர் முழுவதும் ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளனர்.
நம்பிக்கையோடு கொண்டாடுவோம். கோவையை கொண்டாடலாம். நம் ஒவ்வொருவரும் ஒளியை கொண்டாடுவோம்.

மெய்நிகர் 3 டி ஆர்ட் ஸ்ட்ரீட்

தற்போதைய தொற்றுநோய் காரணமாக இந்த வருடம் ஆர்ட் ஸ்ட்ரீட் ஆனது மெய்நிகர் வழியாக நடைபெறுகிறது. இதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இணையம் மூலம் கொண்டு செல்கிறோம்.

ஒரு வார காலம் நடைபெறும் இந்த மெய்நிகர் 3 டி போட்டியில் அனைத்து வயதினரும் மற்றும் அனைத்து கலைகளும் இலவசமாக நீ நகரில் காணலாம். இந்த வருடம் ஜெர்மனியின் 3 டி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் தனித்தனியாக தங்கள் படைப்புகளை பதிவு செய்யலாம். 61 கேலரியில் 610 படைப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலைஞர்களும் தங்கள் படைப்புகளை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்ல இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பட்டறைகள்:

அனைத்து வயதினருக்கும் பட்டறைகள் மற்றும் இலவச நேரடி அமர்வுகள் பல்வேறு வகையான ஆர்ட் -ஜெண்டாங்கல் மற்றும் இல்லஸ்ட்ரேஷன்ஸ், அக்ரிலிக்ஸ் மற்றும் மண்டலா மற்றும் மதுபானி, களிமண் மாடலிங் மற்றும் உயர்வு, கை-எழுத்து மற்றும் டூட்லிங் ஆகியவை அடங்கும். உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள் இந்த ஆண்டு பட்டறைகளை நடத்த முன்வந்துள்ளனர். பேஸ்புக் நேரலையில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பங்கேற்கலாம்.

சூப்பர் ஹீரோக்கள்:

“கோவிட் சூப்பர் ஹீரோக்கள்“ ஆண்டின் கருப்பொருளாகக் கொண்டு கோவிட் காலத்தில் பெரும் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையாக குழந்தைகள் மூலம் ஓவியம் வரையப்பட்டு “நன்றியுணர்வு சுவர்” என்று அழைக்கப்பட்டது. இதனை உள்ளாட்சித் துறை எஸ் பி வேலுமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க