• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் !

March 18, 2019 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் உள்ள விமான நிலையத்தில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கால் டேக்சி நிறுவனத்தின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. முன்புறம் ஏற்பட்ட தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இதையடுத்து உடனடியாக தீயனைப்பு துறையினருக்கு தகவல தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், கார் முழுவதும் எரிந்து நாசமாகியது. காரில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் என்பது தவிர்க்கபட்டது. விசாரணையில் காரை ஒட்டி வந்தவர் ராஜேஷ் என்பது தெரிய வந்து உள்ளது.

இதையடுத்து, கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க