• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வாளாங்குளத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இரண்டு ஆண் சடலங்கள்

October 28, 2017 தண்டோரா குழு

கோவை உக்கடம் அடுத்த  வாளாங்குளத்தில் அழுகிய நிலையில் இரண்டு ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.இந்நிலையில் கோவை உக்கடம் அடுத்த வாலாங்குளத்தில் இரண்டு ஆண் சடலங்கள் கிடப்பதாக உக்கடம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனர்.அதை தொடர்ந்து குளக்கரையிலிருந்த குப்பை மேட்டில் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கிய நிலையில் கிடந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவ்விருவரும் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டனரா அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.அதே வேளையில் ஒரே நேரத்தில் குளத்திலிருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க