• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வால்பாறையில் கொஞ்சி விளையாடிய காட்டு யானைகள் !

January 25, 2019 தண்டோரா குழு

கோவை வால்பாறை புதுத்தோட்டம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் சண்டையிட்டு கொஞ்சி விளையாடியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

நேற்று மாலை கோவை மாவட்ட வால்பாறை புதுதோட்டம் அருகே 5 காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அப்போது காட்டு யானைகளை மீண்டும் வனபகுதியில் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இதனிடையே காட்டு யானைகளில் இரண்டு இளம் ஆண் யானைகள் சண்டையிட்டு கொஞ்சி விளையாடி கொண்டிருந்ததை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டனர். இதனால் யானைகளை விரட்டும் முயற்சியை விட்டு நீண்ட நேரம் அமைதியாக பார்த்தனர். வாலை பிடித்து இழுத்தும் , கொம்புகளால் முட்டிக்கொண்டும், தந்தத்தை சுற்றியும் விளையாடின. பின்னர் வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.

மேலும் படிக்க