• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வழித்தடத்தில் விசாகப்பட்டிணத்தில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

January 5, 2021 தண்டோரா குழு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு, கோவை வழித்தடத்தில் வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:கோவை வழித்தடத்தில்
விசாகப்பட்டிணத்தில் இருந்து கொல்லத்திற்கு
சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து வரும் 14ம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் காலை 7.25 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் மறுநாள் பிற்பகல் 1.50 மணிக்கு கேரள மாநிலம் கொல்லம் நிலையத்தை சென்றடையும். கொல்லத்தில் இருந்து 15ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 11.40 மணிக்கு விசாகப்பட்டிணத்தை சென்றடையும். இந்த ரயில்கள் சாஸ்தன்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கன்னூர், திருவள்ளா, சங்கனச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, குடூர், நெல்லூர், சிங்கராயகொண்டா, விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க