• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வழித்தடத்தில் சபரிமலை சிறப்பு ரயில்

December 23, 2021 தண்டோரா குழு

கோவை வழித்தடத்தில் சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சபரிமலை சீசனையொட்டி காக்கிநாடா } கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, காக்கிநாடா ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற 24 ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் சிறப்புரயில்( எண்: 07139), மறுநாள் இரவு 11.45 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.

அதேபோல், கொல்லத்தில் இருந்து டிசம்பர் 26 ஆம் தேதி இரவு 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 28 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு காக்கிநாடா நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில்களானது, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கன்னூர்,திருவள்ளா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, குடூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க