• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

February 18, 2023 தண்டோரா குழு

கோவை ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள கோவை வந்துள்ளார்.

தற்போது மதுரையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவருக்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.தொடர்ந்து அவர் காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகைக்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.

தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார். டி ஜி பி சைலேந்திரபாபு,கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,கோவை மாநகர மேயர் கல்பனா ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் குடியரசு தலைவர் வந்துள்ளதையொட்டி கோவையில் ஐந்தடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வந்திருந்தார்.

மேலும் படிக்க