May 25, 2025
தண்டோரா குழு
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு மகாராணி அவென்யூ ஜங்ஷன் மருதப்ப முதலியார் வளாகம் முதல் தளத்தில் ப்ரீத் வெல் கிளினிக் தனது இரண்டாவது மையத்தை தொடங்கியுள்ளது.இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவி டாக்டர் ராமாத்தாள் கலந்து கொண்டு புதிய சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
ப்ரீத்வெல் கிளினிக் மையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த சிறப்பு மருத்துவ குழுவினர் மருத்துவர்கள் கௌதமன்,பவித்ரா மோனி,ராஜ ஸ்ரீ,சரண்யா மோனி, சுபஸ்ரீ, ஸ்ருதி சின்னதுரை,தினேஷ் பெரியசாமி, ஆகியோர் கூறியதாவது:-
கோவை வடவள்ளியில் புதிதாக துவங்கப்பட்ட ப்ரீத்வெல் கிளினிக் சென்டரில்,ஆஸ்துமா,நுரையீரல் தொடர்பான பிரச்னைகள்,மூச்சு விடுதலில் சிரமம்,தூக்கம் தொடர்பான பிரச்னைகள், குறட்டை விடுதல்,அதனால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு,காசநொய், நுரையூரல் புற்றுநோய் என நுரையீரல், காது,மூக்கு,தொண்டை,பல் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் இங்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு வழங்க உள்ளோம்.மேலும் எங்களது முதல் ப்ரீத் வெல் கிளினிக் ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.