• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரயில் நிலையத்தில் மக்கள் பாதுகாப்புக்காக குண்டு வெடிப்பு தடுப்பு ஒத்திகை

August 14, 2022 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ரயில் நிலையத்தில் வெடி பொருட்கள் ஏதேனும் கிடைத்தால் எவ்வாறு அதை கையாள்வது என்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

ரயில் பாதுகாப்பு உதவி பாதுகாப்பு ஆணையர் பிரமோத் நாயர் வழிகாட்டுதின்படி rpf காவல் ஆய்வாளர் கிரிஷ் தலைமையில் வெடிப்பொருள் செயலிழப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜா, ரயில்வே காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.

ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளருக்கு ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு சூட்கஸ் கிடைப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுக்கு காவல் ஆய்வாளர் தகவல் தெரிவித்தார் உடனடியாக மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மர்ம சூட்கேஸ் உள்ள பகுதிக்கு மக்களை செல்லவிடாமல் ஆர்பிஎப் படையினர் தடுத்து நிறுத்தினர் கவச உடையணைந்து வந்த நிபுணர் அந்த மர்ம சூட்கேஸை சோதனை இட்டு வெடிபொருட்கள் இருப்பதாக உறுதி செய்து செயலிழக்க செய்தார்.

சுமார் 27 நிமிடங்கள் நேரம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திடீர் ஒத்தகை நிகழ்ச்சியால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து ரயில்கள் வந்து செல்லும் பிளாட்பாரத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க