August 13, 2020
தண்டோரா குழு
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனைக் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் பிறகு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில்வே உட்கோட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ரயில்வே காவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படை,மாநகர காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 475 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்களில் முழு நேரமும் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.தண்டவாளத்தில் செல்பவர்கள் மீதும், தண்டவாளத்தில் கல் வைப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.ரயில் தண்டவாளங்களுக்கு அருகே மது அருந்துவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.