• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரத்னபுரியில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை துணிகர கொள்ளை

January 20, 2021 தண்டோரா குழு

கோவை ரத்தினபுரி பகுதியில் பட்டப்பகலில் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்ட் ஒர்க்கர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகை துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

கோவை ரத்தினபுரி, பகுதியில் வசிப்பவர் நாகராஜ் (வயது 38), இவர் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்டர். ஒர்க்ஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு அவரும் அவர் மனைவியும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது வீடு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்ததில் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க