• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரசிகர்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி !

April 22, 2019 தண்டோரா குழு

கோவையில் வரும் ஜூன் மாதம் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதன் முறையாக கோவையில் நடைபெறும் இதில் முன்னனி திரைப்பட பாடகர்கள் பலர் கலந்து கொண்டு பாட உள்ளனர்.

இளையராஜாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் எப்போதும் ராஜா எனும் பெயரில் அவரது இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கோவை ரசிகர்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில் வரும் ஜூன் மாதம் கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜா தலைமையில் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்க உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் அருண் மற்றும் ஒய்.ஜி.மதுவந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் ராஜாதி ராஜா எனும் தலைப்பில் இளையராஜாவின் தலைமையில் திரைப்பட முன்னனி பாடகர்கள் மனோ,சித்ரா ,உஷா உதூப் உட்பட பல்வேறு முன்னனி பாடகர் மற்றும் பாடகிகள் இதில் கலந்து கொண்டு பாட உள்ளதகாவும் குறிப்பாக முப்பது பேர் கொண்ட ஹங்கேரி சிம்பொனி இசைக்குழுவினர்கள் இதில் கலந்து கொண்டு இன்னிசை விருந்தை கோவை வாழ் மக்களுக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். முன்னதாக இந்த சந்திப்பில் ராஜாதி ராஜா இசை நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க